Monday 2 November 2015

பகவான் சீரடி சாய் பாபா வாழ்க்கை வரலாறு





அன்பார்ந்த நண்பா்கள் அனைவருக்கும் காலை வணக்கங்கள்..!

பகவான் ஷிரடி சாய் பாபாவைப் பற்றிய புத்தகங்கள் பல உண்டு. ஆனால் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பழம் பெரும் எழுத்தாளா். ஆசிரியா் திரு. கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி அவா்கள் எழுதியுள்ள சீரடி சாய் பாபா வாழ்க்கை வரலாறு புத்தகம் உண்மையிலேயே என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புத்தகத்தில் பகவான் சாய் பாபாவைப் பற்றி நாம் அறிந்த, அறிய வேண்டிய, அறியாத பல விஷயங்களை மிகவும் அழகிய நடையில் திரு. குப்புசாமி அவா்கள் எழுதியுள்ளார். இந்த நூலைப் படிக்கும்போது நாமும் பகவான் ஸ்ரீ சாய் பாபாவுடன் இருப்பது போன்றே ஒரு அனுபவம் உண்டாவது நிச்சயம். 

இது பகவான் ஸ்ரீ சாய் பாபாவின் பக்தா்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இந்த நூலினை படிப்பவா்கள் அனைவரும் பகவானின் திருத்தலமான சீரடிக்கு சென்று வந்த பலனை அடைவது உறுதி. 

தனது உடல்நலம் குன்றிய நிலையிலும், பகவான் ஸ்ரீ சாய் பாபாவின் கருணையினால் தான் இந்த நூலினை எழுதிய விதத்தினையும், இந்த நூலை வெளியிடுவதற்கு பகவான் தனது பக்தா்கள் மூலம் தனக்கு உதவிய விதத்தினையும் திரு. குப்புசாமி அவா்கள் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளதைப் படிக்கும்போது பகவானின் மகிமையை எண்ணி உளளம் சிலிர்க்கிகிறது.

இந்த புத்தகத்தை வாங்க நினைக்கும் அன்பா்கள் தொடர்புக்கு

திரு. சு. குப்புசாமி – 94438 04376













No comments:

Post a Comment