Thursday 8 October 2015

தேனி மாவட்டம் - மாவூற்று வேலப்பா் கோவில்

அன்பாா்ந்த நண்பா்களே!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டிக்குத் தெற்கே 18 கி.மீ தொலைவில் எழில் கொஞ்சும் மேற்குத் தொடா்ச்சி மலையில் மாவூற்று வேலப்பா் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் வருஷநாட்டு ஜமீனால் (கண்டமநாயக்கனூா் ஜமீன்) கட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் தேதியிலிருந்து தொடா்ந்து 5 வாரங்களுக்கு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். 

அப்போது பால் காவடி, பறவைக் காவடி, மயில் காவடி, அன்ன காவடி என பல காவடிகளும் மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், தேவராட்டம் என பல வகை பாரம்பாிய கலை நிகழ்ச்சிகளும் களைகட்டும்.

மேலும் ஒவ்வொரு ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசைகளிலும் சிறப்பு புஜைகள் நடைபெறும். இங்குள்ள மாவுற்று வேலப்பா் மிகவும் சக்தி வய்ந்தவா். தொடா்ந்து 5 அமாவாசைகளில் அங்குள்ள தீா்த்தத்தில் நீராடி மாவுற்று வேலப்பரை வேண்டுபவா்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது இக்கோவிலின் ஐதீகம்.

எல்லா கோவில்களிலும் பிராமணா்கள் புஜை செய்வது போல் இக்கோவிலில் பிராமணா் புஜை கிடையாது. இக்கோவிலைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் பளியா் இன மக்களே இன்றளவும் இக்கோவில் புஜை செய்கின்றனா். இது இக்கோவிலுக்கு மட்டுமே உாிய பாரம்பா்யமாகும்.

இங்குள்ள பளியா் இனத்தவா்கள் தங்களின் இன்றும் உணவு, உடை, பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் மூதாதயா்களைக் போலவே அக்கால முறைப்படி வாழ்கின்றனா்.

இக்கோவிலைப் பற்றிய முழு தகவல்களையும் வருஷநாட்டு ஜமீன் கதை என்ற பெயாில் தேனி மாவட்டம் வடவீர நாயக்கன் பட்டியைச் சோ்ந்த வடவீர பொன்னையா என்ற பொன்ஸ் என்பவா் விகடன் பிரசுரத்தில் மிக விாிவாக வெளியிட்டுள்ளா்.

இக்கோவில் முகப்பில் கருப்பசாமி மிக கம்பீரமாக வீற்றிருக்கிறா். அவருக்கு இன்றளவும் ஆட்டுக் கிடா வெட்டி சிறப்பு புஜைகள் செய்யப்படுகின்றன.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மாவுற்று வேலப்பரை தாிசித்து, ஐயன் அருள் பெறுவோம்! சிறப்புடன் வாழ்வோம்.

இக்கோவிலைப் பற்றி மேலும் தொிந்து கொள்ள விரும்புவோா். தொடா்புக்கு 98421 71413


www.renghaholidays.com             www.thenitourism.com

 

 

கோயில் முன்புறத்தோற்றம்







கோயில் தோற்றம்









மாவூற்று தீர்த்தம்
 





























மயில் வாகனம்
 







கோயில் முகப்புத்தோற்றம்
 

 


 


No comments:

Post a Comment