Saturday 17 October 2015

குச்சனூர் - சனீஸ்வர பகவான்




தமிழகப் பெருங்கோவில்களில் சனீஸ்வர பகவானை உபசந்நிதியிலேயே காண முடியும். ஆனால், இங்கே அப்படியல்ல

சனீஸ்வர பகவான் தலை நாயகனாக மும்மூர்த்தியாக மற்ற தெய்வங்களோடு இணை இல்லாமல் தனிப்பெருந்தெய்வமாக நின்று விளங்கும் திருத்தலம்குச்சனூர்ஆகும்.  

சனீஸ்வர பகவானே இங்கு மூலவர். ‘குச்சனூரான்என்ற திருப்பெயரும் பேச்சு வழக்கில் இங்கே வழங்கி வருகின்றது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூர் எனுமிடத்தில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.

தலவிருட்சமும் - மூலஸ்தானமும்

மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். கருநிறமுடன் லிங்கவடிவில் தோற்றம். உடன் உற்சவ மூர்த்தியும் உள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை உற்சவர் பவனி வருவார்

முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து இருப்பதால் (ஐக்கியமாகி இருப்பதால்) மூலவருக்கு ஆறு கண்கள் இருக்கின்றன.

அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவிலின் வளாகத்தில் வினாயகப் பெருமான், முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது.  

அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலும், நாகர் கோவிலும் உள்ளன. மூலஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை மரம் உள்ளது. விடத்தலை மரம் ஸ்தலவிருட்சமாகும்.

காகத்திற்கு முதல்மரியாதை

நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவறாமல் நடைபெறுகிறது. பூஜை முடிந்தபின் தளிகை காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு தளிகையை வைப்பர்.  

தளிகையை காகம் உண்டபின்தான் பக்தர்களுக்கு பரிமாறப்படும். இது மிகவும் சிறப்பானது. தவிர, சனி பகவானுக்கு உகந்தது என எள் பொங்கலும் வைக்கப்படும்.

சனிப்பெயர்ச்சியும் - ஆடித்திருவிழாவும்

சனிப்பெயர்ச்சி தினம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் சனிக்கிழமை தோறும் உற்சவகாலம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மூன்றாம் சனிக்கிழமை மிகவும் பிரசித்தமாகும்

அன்று கம்பளத்தார் மேல்ப்பூலாநந்தபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் ஆட்டம் ஆடி கோவிலில் சிறப்பு பூஜை செய்வார்கள். இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் ஆளுகைக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தலவரலாறு
 
செண்பகநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த அரசன் தினகரன் குழந்தைப்பேறின்மையால் அவதிப்பட்டான். குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிவந்தான். கோயிலில் அவனுக்கு அசரீரி ஒன்று கேட்டது

அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது

அசரீரியில் சொன்னபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் அவனிடம் வந்து சேர்ந்தான். அந்த மன்னனும் அந்தச் சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான்.  

அதன் பின்பு, அசரீரியில் சொல்லியபடியே அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அரசனும், அரசியும் அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர்

இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். சதாகன் அப்படி இருக்கவில்லை.  

இதனால், அரசன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனையே அரசனாக்குவது என்று முடிவு செய்து அவனுக்கே முடிசூட்டினான்


அரசனுக்கு சனி
 
இந்நிலையில் அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் தினகரன் பெரும் துன்பத்திற்கு ஆளானான். தந்தையின் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து வழிபடத் தொடங்கினான்

அவனது வழிபாட்டால் மன மிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது.  

பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன

இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு, நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும்என்று கூறினார்

தந்தையின் தோஷம் ஏற்ற மகன்
 
சந்திரவதனன் தனது தந்தையின் துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும்.  

அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் சம்மதித்தான்

சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான், இந்த ஏழரை நாழிகைக் கால சனி தோஷம்கூட சந்திரவதனனின் முற்பிறவியின் வினைகளுக்கேற்பதான் வந்ததாகவும் இனி யாருக்கும் எக்குறையும் இருக்காது என்றும் உறுதியளித்தார்

உடனே சந்திரவதனன் சனீஸ்வர பகவானிடம், சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்களை அத்துன் பத்திலிருந்து மீட்க அங்கேயே எழுந்தருள வேண்டினான். சனீஸ்வரனும் அக்கோரிக்கையை ஒப்புக்கொண்டு, அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்

சந்திரவதனன், சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லால் கூரை அமைத்தான்.  

அதன் பிறகு செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூர் என்று பெயர் மாற்றமடைந்து விட்டது. அதன் பிறகு, சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர்
 
புராண வரலாறு

சுவர்க்கலா தேவியும் சாயா தேவியும்

சூரியனின் மனைவியான சுவர்க்கலா தேவிக்கென்று சிவசக்தி இருந்தது. தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க தன் நிழலையே தன்னைப் போன்ற ஒரு பெண்ணாக மாற்றி சாயாதேவி என்று பெயர் சூட்டினார்.

பின்னர் சுவர்க்கலா தேவி சாயா தேவியை நோக்கி நான் சூரிய பகவானுடன் இல்லறம் நடத்தும் சக்தியை இழந்து விட்டேன். மீண்டும் அச்சக்தியைப் பெற கானகம் வந்துள்ளேன்.  

எனவே, சூரியனுக்கு என்னைப் போலவே மனைவியாக இருந்து என் குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வரவேண்டும் என்று ஆணையிட்டாள்.

அவள் வேண்டுகோளை ஏற்று சூரியனுக்கு மனைவியாகப் புறப்படும் முன்தங்கள் சொற்படியே நடக்கின்றேன்’, ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால்நான் உண்மையை உரைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாள். அதற்கு சுவர்க்கதேவி உடன்பட்டாள்.

சுவர்க்கதேவி தன்னை யார் என்று அறியா வண்ணம் குதிரை வடிவு கொண்டு தவம் செய்யத் தொடங்கினாள், அங்கே சாயாதேவி சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த ஆரம்பித்ததில் அப்பொழுது சூரியனுக்கு சாயாதேவி மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

1. கிருதத்வாசி 2. கிருதவர்மா என்று ஆண்பிள்ளைகளும், தபதி என்ற மகளும் பிறந்தனர். கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வரபகவான் ஆக மாறினார். தபதி சனீஸ்வரனின் சகோதரி ஆவார். இன்றும் தபதி நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சூரியனும் சனியும்

சனிபகவான் கருமை நிறம் உடையவன். சனிபகவான் செயல்கள் எல்லாம் சூரியனுக்கு எதிரிடையாக இருப்பதாலும் தந்தை மகன் சனியுடன் காழ்ப்புணர்வு கொண்டு பகையுணர்வு ஏற்பட்டது

சனிபகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. தான் ஒரு சர்வேஸ்வர நிலை அடைய வேண்டுமென்று தாயாரிடம் அனுமதி பெற்று காசிக்குச் சென்றார். சனீஸ்வரன் காசியில் லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்து கடுமையாகப் பல ஆண்டுகள் தவம் செய்தார். அவர் முனைப்பான பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போய் சிவபெருமான் பார்வதியுடன் காட்சி அளித்தார்

அப்போது சிவபெருமான் சனிபகவானை நோக்கிஉமக்கு என்ன வேண்டும்என்று கேட்டார். எனக்கு தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும் என்றார். உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்று விட்டனர். நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும் பலசாலியாகவும் ஆகவேண்டும் என்று கேட்டார் சனிபகவான்

இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு கொடுத்து அருள் செய்ய வேண்டும் என்றார். அவர் வேண்டுகோளை ஈஸ்வரன் ஏற்றதால்சனீஸ்வரர்என்ற பெயர் பெற்றார். பெயர் பெற்று விட்டால் போதுமா? நவக்கிரகங்களில் தான் அதிக பலத்துடன் இருக்க வேண்டும், அத்துடன் தன் பார்வைபட்டால் எல்லாப் பலமும் இழந்துவிட வேண்டும் என்றும் வரம் கேட்டார்

முழுமுதல் கடவுள் சிவபெருமான் சனிபகவான் வேண்டுகோளை மீண்டும் ஏற்றார். அன்றுமுதல், நவக்கிரகங்களில் அதிக பலத்தையும் விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் தன் ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளானார் சனிபகவான்.

மாந்தி - குளிகை

சனிபகவானுடைய புதல்வர்கள் மாந்தி, குளிகை என இருவரும் ஒருவரே! எமகண்டம், இராகுகாலம் போல குளிகை காலங்களில் எல்லா தீயதேவதைகளும் குளிகை நேரத்தில் நிலவுலகில் பிரவேசிக்கும். அக்காலங்களில் நல்ல காரியங்கள் தவிர்க்கப்படுகின்றன. சனிபகவான் போல் ஆற்றல் இவருக்கும் உண்டு. எமதர்மனுடைய தனிச்செயலர் என்றும் இவரைக் கூறுவார்கள்.

ஸ்ரீலங்கா மலேசியா சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து திருக்கோவிலை கா பக்தர்கள் நிறையபேர் வருகிறார்கள். மேலும் த்திருத்தலத்தைப்  பற்றி அறிwww.saneeswaratemple.com பார்க்கவும்.

சனீஸ்வர பகவானை தரிசிப்போம்..! தோஷங்கள் நீங்கி நன்மைகள் பெறுவோம்..!

















































































































































































































 






































No comments:

Post a Comment