Wednesday 14 October 2015

தேனி மாவட்டம் - வீரபாண்டி கௌமாரியம்மன்





வீரபாண்டி கௌமாரியம்மன்


அன்பாா்ந்த நண்பா்களே..!


தேனி மாவட்டம் முல்லையாறு ஓடும் பகுதியில் அமைந்துள்ளது, வீரபாண்டி. இங்கு கொலுவீற்றிருக்கும் கௌமாரியம்மன் இம்மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறாள்.

பசு ஒன்று நடந்து சென்ற போது அதன் கால் ஒரு கல் மீது இடறியது. அப்போது அந்த கல்லிலிருந்து ரத்தம் பீறிட்டது. உடனே அந்தப் பசுவிற்கு பால் சுரந்தது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, தினமும் அந்தப் பசு நேராக அந்த கல் இருக்கும் இடம் தேடி வருவதை வாடிக்கையாக கொண்டது.

கன்றுக்குக்கூட பால் தராமல் பசு தினமும் எங்கே செல்கிறது என்று பார்த்தபோது, மடியிலிருந்து பால் தானாக கறந்து, கல்லின் மீது பொழிய, அவ்வளவு பாலையும் கல் உறிஞ்சிக் கொண்டிருந்தது.

அப்போது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் கௌமாரி. எனக்கு அந்த இடத்தில் கோயில் எழுப்புஎன்று கூறியதன் பேரில் வீரபாண்டியில் கோயில் எழுப்பப்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது. கோயிலில் சுயம்புவாக உள்ள அம்மனின் சிலை பக்தர்களை பரவசம் கொள்ளச் செய்கிறது.

மதுரையை ஆண்ட மன்னன் வீரபாண்டியனுக்கு இரண்டு கண்களும் பழுதுபட்டன. பார்வை வேண்டி தவம் மேற்கொண்ட அரசன் முன்பு, ஈசன் தோன்றினான். ‘தென்பாண்டி சீமையில் முல்லையாறு பாயும் ஊரில் கண்ணுடைய தேவி தவம் கொண்டுள்ளாள். அம்மன் அமர்ந்துள்ள திசையில் எனக்கு கோயில் எழுப்பு, தேவி மனம் மகிழ்ந்து உனக்கு ஒரு கண் பார்வை வழங்குவாள். மற்றொரு கண் பார்வையை நான் வழங்குகிறேன்என்று கூறி மறைந்தார்.

அதுபோன்றே ஈசனுக்கு மன்னன் வீரபாண்டியன் கோயில் எழுப்பி கண் பார்வை பெற்றான். ஈசனுக்கு கோயில் எழுப்பி கண் பார்வை பெற்ற மன்னன் வீரபாண்டியன் பெயரே காலப்போக்கில் வீரபாண்டி என ஊர் பெயரானது. வீரபாண்டியில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோயில் கௌமாரி பார்க்கும் திசையில் அமைந்துள்ளது.


வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மே 8ந் முதல் 15ம் தேதி வரை திருவிழா நடக்க உள்ளது. சித்திரை கடைசியில் துவங்கி 8 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மன் அருள் பெற்றுச் செல்வர்.

முல்லையாற்றங் கரையில், அருள் இறக்கி மேளதாளத்துடன் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது மெய் சிலிர்க்க வைக்கும். திருவிழா நாட்களில் அம்மன் தினசரி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடக்கும். பக்தர்கள் 22 நாட்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

வீரபாண்டி கௌமாரியை வினை தீர்க்கும் வீரபாண்டி மாரி என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். குழந்தை வரம், திருமண யோகம், நோய்களுக்கு நிவாரணம், வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகவும் பக்தர்கள் பரவசமடைகின்றனர். வேண்டிய வரம் கிடைத்ததும் அக்னிச் சட்டி எடுத்தும் ஆயிரம் கண் பானை சுமந்தும் மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை குணமாக வேண்டுவோர் சேற்றை உடலில் பூசி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் கொடிக்கம்ப வழிபாடும் நடக்கும். கடந்த மாதம் 18ம் தேதி கொடிக்கம்பம் நடப்பட்டது. கொடிக் கம்பத்தை ஈஸ்வர மூர்த்தியாக வணங்குகின்றனர். முக்கொம்புடன் கூடிய பால்வடியும் அத்திமரத்தை கோயிலில் கொடிக் கம்பமாக வைத்து வணங்குகின்றனர்.

திருவிழா நாட்களில் முல்லையாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து பக்தர்கள் கொடிக் கம்பத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். திருவிழா நெருங்கும் சமயத்தில், பக்தர் கனவில் தோன்றும் அம்மன், முக்கொம்புடன் கூடிய பால் வடியும் அத்திமரம் இருக்கும் திசையை காட்டுகிறது. அதன்படி சென்று, அத்திமரத்தை கொண்டு வருகின்றனர்.

முதலாவதாக அத்தி மரத்திற்கு வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அதன்பின்னர் மேளதாளத்துடன் திருக்கோயிலுக்கு கொண்டு வருகின்றனர்.   தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில் 8வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது வீரபாண்டி. பக்தர்களின் வசதிக்காக திருவிழா நாட்களில் தமிழகம் எங்குமிருந்தும் வீரபாண்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்


புராண வரலாறு

முந்தய பாண்டிய நாட்டின் ஒரு பகுதிதான் இன்றைய வீரபாண்டி ஆகும். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜேந்திரபாண்டியன், தன் தம்பியான இராச சிங்கபாண்டியனுக்கு மலைவளம் கொண்ட இந்த ஆற்றுப்பகுதியை கொடுத்து ஆட்சி நடத்த கேட்டுக் கொண்டான். இராச சிங்கனின் மூதாதையர் கட்டிய கோவில்கள் வைகை நதியின் கரையோரத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அதனை சீர்படுத்தினான் இராச சிங்கபாண்டியன்.

இராச சிங்கனின் மூதாதையான வீரபாண்டி மதுரையில் ஆண்டு வரும் பொழுது அவனது முன் ஜென்ம வினையால் பார்வை இழந்தான். அவன் இறைவனை நோக்கி கடுமையான விரதம் இருந்து வேண்ட, இறைவன் அவருக்கு பிரத்தியட்சமாகி, இந்த வீரபாண்டி தலத்தில் உள்ள கௌமாரி தவமியற்றும் இடம் சென்று வேண்டினால் நீ கேட்டது கிடைக்கும் என்றார்

இங்கு வந்து அம்மனையும் ஈஸ்வரனையும் வேண்ட பார்வை கிடைக்கப் பெற்றான். கண்பார்வை கிடைக்கப் பெற்ற மன்னன், ஈஸ்வரனுக்கு கண்ணீஸ்வரர் என்ற பெயரிட்டு கற்கோவில் அமைத்தார். இந்த மன்னரின் பெயரால் இந்த தலமும் வீரபாண்டி என்ற பெயர் பெற்றது. திருக்கோவிலுக்கும்  கௌமாரி அமமன், திருக்கண்ணீஸ்வரர் என்று ஆயிற்று.

இங்கு கௌமாரி அம்மன் என்ற பெயரில் உமாதேவி ஈஸ்வரனை நோக்கி இயற்றினார். அதுசமயம் அங்கு வந்து தொல்லை கொடுத்த அசுரனை  அருகம்புல்லை முக்கழுப்படையாக மாற்றி அவனை அழிக்க, ஈஸ்வரன் தோன்றி சிவப்பிரசாதம் தர கௌமாரி அம்மன் கன்னி தெய்வமாக மாறினாள். அவள் பூசித்த சிவலிங்கமே திருக்கண்ணீஸ்வர் ஆனார்.

கௌமாரி அம்மனையும் திருக்கண்ணீஸ்வரரையும் மனதார வேண்ட தீராத நோய் தீரும், குறிப்பாக கண்பார்வை குறைந்தோர் நல்ல நிவர்த்தி பெறுவர், பாவங்கள் நீங்கிடப்பெற்று நல்ல முன்னேற்றம் பெற்று செல்வ வளம் பெறுவர் என்பது ஐதீகம்.



கௌமாரியம்மன்




































கௌமாரியம்மன்




































கௌமாரியம்மன் (ஆதி ரூபம்)





































(ஸ்ரீ வீரபாண்டி கௌமாாியம்மன் கோவில் கொடிக் கம்பம் - சித்திரைத் 

திருவிழாவில் முக்கொம்புடன் கூடிய பால் வடியும் அத்திமரம் )

 








சித்திரைத் திருவிழா

 


வீரபாண்டி கௌமாரியம்மன் - தோ் 














































கோவில் முகப்புத் தோற்றம்











முல்லைப் பொியாா் நதி














முல்லைப் பொியாா் நதி















அருள்மிகு கண்ணீஸ்வரமுடையாா் திருக்கோவில்
 
























அருள்மிகு கண்ணீஸ்வரமுடையாா் திருக்கோவில்























சிவன் (கண்ணீஸ்வரமுடையாா் )




முருகன் (கண்ணீஸ்வரமுடையாா் திருக்கோவில்)




மகாமண்டபம்  (கண்ணீஸ்வரமுடையாா் திருக்கோவில்)

























No comments:

Post a Comment