Thursday 29 October 2015

தினமும் ஒரு திவ்ய தேசம் - சோழ நாடு - 40

 

 

 

அன்புடையீா்.....!


தினமும் ஒரு திவ்யதேசத்தில் 

இன்றைய திவ்யதேசம்

 

சோழ நாடு திவ்யதேசம் - எண் 40

 

அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில்


 

மூலவர்
கோவிந்தராஜர் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)
உற்சவர்
தேவாதிதேவன்
தாயார்
புண்டரீகவல்லி                              
ஊர்
தில்லைவனம், திருச்சித்திரக்கூடம், சிதம்பரம்
மாவட்டம்
கடலூர்
மாநிலம்
தமிழ்நாடு
 
 

 

 


 

 

 

 


 

 

 

 

 

 

 

 

Wednesday 28 October 2015

தினமும் ஒரு திவ்ய தேசம் - சோழ நாடு - 39




அன்புடையீா்.....!


தினமும் ஒரு திவ்யதேசத்தில் 

இன்றைய திவ்யதேசம்

சோழ நாடு திவ்யதேசம் - எண் 39

 

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்

 

மூலவர்
அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன்
உற்சவர்
சீனிவாசன்
தாயார்
பூவார் திருமகள், பத்மாவதி
ஊர்
திருவெள்ளக்குளம்
மாவட்டம்
நாகப்பட்டினம்
மாநிலம்
தமிழ்நாடு
 
 

 

 

 

 

Tuesday 27 October 2015

தேனி மாவட்டம் – பெத்தாக்ஷி விநாயகர்

அன்பாா்ந்த நண்பா்களுக்கு ..! வணக்கங்கள் ..!

தேனி மாவட்டம், தேனியின் மையப்பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெத்தாக்ஷி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. தொழில் சிறக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், வாழக்கையில் வளம் பெறவும் அளவற்ற அருளை வாரி வழங்குவதில் ஸ்ரீ பெத்தாக்ஷி விநாயகருக்கு நிகா் அவரே.

தேனியில் மக்கள் எந்த நல்ல செயல்கள் ஆரம்பித்தாலும் பெத்தாக்ஷி விநாயகரை  வழிபட்டுத்தான் ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மார்கழியில்  சபரிமலைக்கு மாலை அணியும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர் இங்கு மாலை  அணிவர். புதிய வாகனங்கள் யாவையும் இக் கோயில் முன்பு நிறுத்தப்பட்டு பூஜை  செய்து அதன்பின் உபயோகிப்பது வழக்கம்.

மார்கழி மற்றும் ஆடி மாதங்களில் இக்கோயிலின் அர்ச்சகர் விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து, சொர்ண அலங்காரம், புஷ்ப அலங்காரம், காய்கறி அலங்காரம், பழ வகைகளில் அலங்காரம், கலர்ப்பூக்களில் அலங்காரம், தேங்காய் அலங்காரம், தாமரை அலங்காரம் என பல வகையான அலங்காரங்கள் செய்து அழகு படுத்துவது பக்த கோடிகளுக்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

மேலும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3மணி முதலே கோயிலின் பக்த குழுவினர் வீதி வீதியாக சென்று பக்தி பாடல்களை பாடி ஆன்மிக சேவை செய்வதும், திங்கள் கிழமை தோறும் மாலை 6 மணிக்கு சோமவார பஜனை செய்வதும் சிறப்பு.

அத்துடன் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வித்யாக ஹோமம் செய்வது கோயிலின் மிகப்பெரும் தனி சிறப்பாகும்.

சிறப்பம்சம்:

மூலவர் வலம்புரி விநாயகராக இருப்பதும், தும்பிக்கையில் பிரம்ம கலசம் வைத்திருப்பதும் சிறப்பு. தமிழகத்தில் சோமாஸ்கந்தருக்கும், ஆஞ்சநேயரின் அன்னையான அஞ்சனா தேவிக்கும் குறிப்பிட்ட சில  இடங்களில் சன்னதி இருப்பதை போல் இங்கும் சோமாஸ்கந்தருக்கும், அஞ்சனா தேவிக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் சாஸ்திரப்படி மிகச் சிறந்த முறையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

தலபெருமை:

கோயிலில் கன்னி மூலையில் அருள்பாலிக்கும் கன்னிமூல கணபதி தான் இக்கோயிலில்  முதலில் சுயம்புவாக தோன்றியவர். எனவே, இவருக்குத்தான் வைதீகக முறைப்படி  முதல் பூஜை. அடுத்து தான் மூலஸ்தான விநாயகருக்கு பூஜை.

விநாயகரின்  இடதுபுறம் சோமாஸ்கந்தர் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மேலே சிவன்,  பார்வதிக்கு நடுவில் முருகன் அமர்ந்த கோலமாக சோமாஸ்கந்தர் அமைப்பும் அதன்  கீழ் சோமசுந்தரேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இவருக்கு எதிரில் நந்தி  அமைந்துள்ளது. இதுபோன்ற சிவக்குடும்ப கோயிலை பார்ப்பது மிகவும் அரிது.  இங்கு பிரதோஷ வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை  சோமவாரத்தில்  நூற்றியெட்டு சங்கு அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.

மூலவர் பெத்தாக்ஷி விநாயகர் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வடக்கு நோக்கிய  விஷ்ணுதுர்க்கை அருகே சரஸ்வதி. கிழக்கு நோக்கிய கன்னிமூல கணபதி அருகே நாகர். விநாயகர் கோஷ்டத்தில் தெற்கே மகாலட்சுமி, மேற்கே முருகன், வடக்கே நர்த்தன விநாயகர். சோமாஸ்கந்தர் கோஷ்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே மகாவிஷ்ணு, வடக்கே பிரம்மா சன்னதிகள் உள்ளன. நகரபிரமுகர்கள், வியாபார பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இக்கோயில் நடைபெற்று வருகிறது.

தலவிருட்சமாக வன்னி மரமும், வில்வ  மரமும் அமைந்துள்ளது. இதில் வன்னி மரத்தின் கீழ் நாகர் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:

இந்த கோயில் 200 வருடம் பழமையானது. ஆரம்ப காலத்தில் சுயம்புவாக தோன்றிய கன்னி மூலையில் உள்ள கணபதியைத்தான், பிரதானமாக வைத்து பூஜை செய்து வந்தனர்.  இவருக்கு பின்புறம் மிகப்பெரிய ஆலமரம் இருந்தது.

சுமார் 90 வருடங்களுக்கு முன்பு பெத்தாக்ஷி அம்மா என்பவர் இந்த சுயம்பு விநாயகருக்கு அபிஷேகம் ஆராதனை செய்து வந்தார். அத்துடன் இங்கு வரும் பக்தர்களுக்கும் சேவை செய்து வந்தார். அவரது காலத்திற்கு பின், இந்த விநாயகரை யாரோ எடுத்து சென்று விட்டனர்.

மறுபடியும் சில நாட்கள் கழித்து இருந்த இடத்திற்கே விநாயகர் திடீரென வந்து விடுவார். இதுபோன்று அடிக்கடி நடைபெற்று வந்ததால் கோயிலின் நிர்வாகத்தினர் தற்போதுள்ள மிகப் பெரிய விநாயகரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய ஆரம்பித்தனர். 

பெத்தாக்ஷி அம்மா நினைவாகவும், பெத்தாக்ஷி என்றால் பெரிய அளவில் ஆட்சி புரிபவர் என்பதன் அடிப்படையிலும் இங்குள்ள விநாயகருக்கு பெத்தாக்ஷி விநாயகர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

நமது தொழில் சிறக்கவும், நமது குழந்தைகளின் எதிர்காலம் வளம் பெறவும் அருள்மிகு ஸ்ரீ பெத்தாக்ஷி விநாயகரை வணங்குவோம்..! அருள் பெறுவோம்..!

 www.thenitourism.com

 


 



 



 

 



 



 







 



 




 


 

 

Sunday 25 October 2015

தினமும் ஒரு திவ்ய தேசம் - சோழ நாடு - 38



அன்புடையீா்.....!


தினமும் ஒரு திவ்யதேசத்தில் 

இன்றைய திவ்யதேசம்


சோழ நாடு திவ்யதேசம் - எண் 38


அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

 

மூலவர்
வரதராஜப்பெருமாள் (கஜேந்திரவரதன்)
உற்சவர்
மணிக்கூட நாயகன்
தாயார்
திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)
ஊர்
திருமணிக்கூடம்
மாவட்டம்
நாகப்பட்டினம்
மாநிலம்
தமிழ்நாடு
 

 

 

 

 

North India Tour Package

Goa Tour Package

Friday 23 October 2015

தேனி மாவட்டம் - பெரியகுளம் - பாலசுப்பிரமணியர் கோயில்


அன்பிற்கிணிய நண்பா்களுக்கு....!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணியர்  கோயில் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்திலேயே மிகவும் பழமையான கோயில் இது. இக்கோவிலின் திருப்பெயா் ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில்.

இங்கு மூலவர் சிவனாக இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
 
ஒரே கோயிலில் தனித்தனி சன்னதிகளில் சிவன், அம்பாள், முருகன் ஆகியோர் அருளுகின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூர்ய, சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர், சப்தகன்னிகள், பைரவர், ராகு கேது மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர்.

சோழமன்னர் கால கட்டடக்கலைக்கு சான்று பகரும் சிறப்பு பெற்ற இக்கோயில் தூண்களில் அகோரவீரபுத்திரர், ருத்ரதாண்டவர், துர்க்கை, மன்மதன் ஆகியோரும் அமைந்துள்ளனர்.
 
இங்குள்ள பிரம்ம தீா்த்தத்தில் நீராடி முருகனை வணங்கிட, தீராத வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம்.
 
இக்கோயில் காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராகநதியின் கரையில் அமைந்துள்ளது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர்.

பெரியகுளத்தில் ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணியர் ஆறுமுகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி தருகிறார். அருகில் லிங்க வடிவில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்று அருள்பாலிக்கின்றனர்.
 
ராஜேந்திரசோழமன்னன் கட்டியதால் இக்கோயில் அப்பகுதியில் பேச்சு வழக்கில் "பெரியகோயில்' என்ற சிறப்பு பெயருடன் அடையாளம் காணப்படுகிறது.

முருகனுக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னதி இருப்பதால் அதிகளவில் அறுபதாம், எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

 பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை ராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில், ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான்.
 
அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார்.
 
தன் பாவத்தைப் போக்கவும், பசியால் துடித்த பன்றிகளுக்கும் அருளிய முருகப் பெருமானின் திருப்பெருமையை உணர்த்தவும் ராஜேந்திர சோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான்.

இப்புகழ்பெற்ற திருக்கோவிலை தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய நிதியமைச்சருமான திரு. O. பன்னீா்செல்வம் அவா்கள் திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தொிவித்துக் கொள்கிறேன்.